திருக்குறள் உலகம்- வள்ளுவத்தை முழுமையாக தமிழர் மெய்யியல் வழியில் அறிந்து நடப்போம்
வள்ளுவர் - ஆதி பகவன் முதற்றே உலகு எனத் தொடங்கி, இந்த உலகம் இறைவனால் படைக்கப் பட்டது என்று கூறி அதை நமக்கு எளிதாகப் புரிய, அகர முதல எழுத்து எல்லாம் - அதாவது நாம் கற்கும் கல்வி அனைத்தின் முதல் தொடக்கம் அகரம் எழுதி தொடங்கியது எனக் கூறி உள்ளார். திருக்குறள் கூறும் சமயம் – ஔவையார் முடிவு ஔவையார் நல்வழி. தேவர் குறளும் திருநான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்றுணர். தெய்வப் புலவர் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த திருக்குறளும், நான்கு வேதங்களின் முடிவான முடிவு எனப்படும் வேதாந்த உபநிடதங்களும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பி ஆரூரர் என மூவர் அருளியதேவாரமும், முனி நம்மாழ்வர் அருளிய திருவாய்மொழியும் திருக்கோவையார், திருவாசகம், திருமந்திரமும் ஒரே பொருள், ஒரே முடிபு உடையவை. திருக்குறள் தமிழ் நன்கு வளர்ச்சி பெற்று, புதிய சொற்கள், இலக்கிய மாற்றம் பெற்ற பின்பு, வெண்பா யாப்பில் - பாயிரத்தோடு இடைக்காலத்தில் எழுந்தது. பாயிரம் அமைப்பு என்பது சங்க இலக்கியத்தில் இல்லாது போக, பொஆ.9-10ம் நூற்றாண்டில் தான் எட்டுத்தொகை நூல்களின் கடவுள் வா...